கும்பகோணத்தை தனி மாவட்டமாக பிரிக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தல் அமைச்சர்

அக் 04,கும்பகோணம், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருப்பதாகவும், ஆய்வு செய்து தேவைக்கு ஏற்ப தனி மாவட்ட கோரிக்கை செயல்படுத்தப்படும் என்றும் வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். கும்பகோணம் மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 14 புதிய பேருந்துகளின் பயன்பாட்டை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பி ன் ன ர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று கூறிய அமைச்சர் துரைக்கண்ணு , தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்


.