கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரையில்
22.10.19 அன்று
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம்.
(TJA) மற்றும்
ஶ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் ஒருங்கிணைப்பில்,
மாபெரும் இலவச
பத்திரிகையாளர்கள் பயிற்சி பட்டறை நடைப்பெற்றது.
இதில்
சென்னை,காஞ்சிபுரம்,
தூத்துக்குடி,திருநெல்வேலி,
தஞ்சாவூர்,தேனி,மதுரை,நாமக்கல்,
திண்டுக்கல்,வேலூர்,செங்கல்பட்டு,
திருவள்ளுர்,விழுப்புரம்,சேலம்,
தருமபுரி,கிருஷ்ணகிரி,
கள்ளக்குறிச்சி,
கரூர்,திருச்சி,புதுக்கோட்டை, கன்னியாக்குமரி,திருப்பூர்.கோவை,
ஈரோடு என
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள
அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார்
200 க்கும் மேற்பட்ட
பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்ற பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் பயிற்சி பெற்றனர்கள்.
இப்பயிற்சிப் பட்டறை
தேசியத் தலைவர்
Amb.Dr.டி.ஆர்.கவியரசு
அவர்களின் தலைமையில்,
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர்
திருமதி.என் மனோரஞ்சிதம் நாகராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து,
நியமனக் கடிதங்களையும்,
அடையாள அட்டைகளையும்
வழங்கி
வாழ்த்துரையாற்றினார்.
மற்றும்
அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர்
திரு.வழக்கறிஞர்.கே.நாகராஜ் (அதிமுக),
ஒன்றியச் செயலாளர்
திரு.ஏ.சி.தேவேந்திரன் (அதிமுக),
நகரச் செயலாளர்
திரு.பி.கே.சிவானந்தம் (அதிமுக),
விவசாய அணி ஒன்றியச் செயலாளர்
திரு.வி.வேங்கன் (அதிமுக),
ஆகியோர் உடனிருந்து
வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து,
மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர்
திருமதி.மருத்துவர்.எஸ்.என்.மாலதி நாராயணசாமி (திமுக).
அவர்கள்
TJA பொறுப்பாளர்களுக்கு
அடையாள அட்டைகள் வழங்கி
வாழ்த்துரை வழங்கினார்.
மேலும்,
மாவட்ட து.செயலாளர்
திரு.எம்.சந்திரன் (திமுக).
மாநில து.செயலாளர்
திரு.சா.அசோகன் (விசிக),
நாடாளுமன்ற து.செயலாளர்
திரு.வே.குபேந்திரன் (விசிக).
காட்டாகரம் ஶ்ரீ அம்மன் கோவில்
நிர்வாக இயக்குனர்
ஆன்மீகச் சொற்ப்பொழிவாளர்
அருள்மிகு.எஸ்.கீதா அம்மன்.
ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகைபுரிந்து
வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
இம்மாபெரும் பயிற்சி பட்டறையில்
பத்திரிகைத்துறையின் அடிப்படைகள்,உரிமைகள்,
செய்தி சேகரித்தல்,செய்தியாளர்களின் களப்பணிகள்,பேட்டி எடுத்தல்,வார்த்தைகள் கோர்ப்பு,
செய்திக் கோர்ப்பு,தலைப்புயிடுதல்,ஆர்என்ஐ விளக்கக் குறிப்புகள்,ஊடக பரினாம வளர்ச்சிகள், பாதுகாப்புகள் என பல்வேறு வகையான விளக்கங்களை
பயிற்சியாளர்
நமது தமிழ்மண் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் திரு.பூவிழியன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில் பயிற்சியளித்தார்.
இப்பயிற்சி பட்டறையானது,
தமிழகத்தில் மட்டுமல்லாமல்
அகில இந்திய வரலாற்றில்
பத்திரிகையாளர்களுக்கென
பயிற்சியினை கட்டணங்கள் வாங்கியும் கூட நடத்தப்படவில்லையெனவும்,
ஆனால்,
முதன் முதலாக இலவசமாகவே
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம்தான்
நடத்துகிறது.
பத்திரிகைத் துறை வரலாற்றில் இது மாபெரும் வரலாறு என்று
அங்கு வருகைதந்த அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பெருமிதத்தோடு பகிர்ந்துக் கொண்டனர்.
TJA வின்
தேசியத் தலைவர்
திரு.Dr.டி.ஆர்.கவியரசு
அவர்கள் பேசும் பொழுது
இப்பயிற்சி பட்டறையானது
இனி ஒவ்வொரு மாவட்டத்திலும்
தொடர்ந்து இலவசமாக நடத்தப்படும்
என அறிவிப்புச் செய்தார்.
TJAவின்
சிறப்பு ஆலோசகர்
"செயல் வீரர்"
திரு.கு.ஶ்ரீ குரு.
மாநிலச் செயலாளர்
"பாலிமர் நீயூஸ்"
திரு.ஆர்.மணிகண்டன்.
மாநில பொருளாளர்
"அரசியல் காற்று"
திரு.அ.சி.தென்னரசு.
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
"நீயூஸ் ஜெ"
திரு.ஆ.நந்தக்குமார்.
மாநில இ.செயலாளர்கள்
"தின பூமி"
திரு.இரா.தமிழ் குமரன்.
"வெளிச்சம்"
திரு.கு.அருண் குமார்.
கி.கிரி மாவட்டச் செயலாளர்
"ராஜ் நீயூஸ்"
திரு.த.நாகேந்திரன்.
கி.கிரி மாவட்ட பொருளாளர்
"தினக் குரல்"
திரு.எஸ்.மதியழகன்.
சேலம் மாவட்டச் செயலாளர்
"அரசியல் காற்று"
திரு.பி.பிரஜிஸ் குமார்.
சேலம் மாவட்டப் பொருளாளர்
"வைகைப் புயல்"
திரு.மு.வைத்தியலிங்கம்.
தி.மலை மாவட்டச் செயலாளர்
"ராஜ் நீயூஸ்"
திரு.தே.அன்பரசு.
வேலூர் மாவட்டச் செயலாளர்
"பாலிமர் நீயூஸ்"
திரு.கே.திருநாவுக்கரசு.
தருமபுரி மாவட்டச் செயலாளர்
"மாலை முரசு"
திரு.கு.சிற்றரசு
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
"தினகரன்"
திரு.சி.உதயக்குமார்.
தருமபுரி மாவட்டப் பொறுப்பாளர்கள்
திரு.ரே.ப.திருமால்,
திரு.வெங்கட் சுரேஷ்,
திரு.மா.ஆனந்தக்குமார்,
திரு.புஷ்பலிங்கம்
கி.கிரி மாவட்டப் பொறுப்பாளர்
திரு.சுரேஷ்
ஆகியோர்கள் இம்மாபெறும்
பயிற்சிப் பட்டறையை
ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
பயிற்சிபெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும்
பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.