திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட வார்டு 38 பவுண்ட் ரோடு சாலையில் அமைந்திருக்கும் இடத்தில் கழிவு நீர் ஓடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருக்களில் ஓடிய நிலையில் மாநகராட்சியிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு PFI மற்றும் SDPI கட்சி நிர்வாகிகள் மூலம் அடைப்பு ஏற்பட்டிருந்த இடத்தில் இருந்த கல்லை அப்புறப்படுத்தினர்....
பிறகு மாநகராட்சி AE சிவசுப்பிரமணியன் அவர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு அதனை விரைவில் சீர்படுத்தி தருவதாக உறுதி அளித்துள்ளார்....
இந்நிகழ்வில் SDPI - கட்சியின் பாளை தொகுதி இணை செயலாளர் K.M.S.M. புகாரி சேட், SDTU-தொழிற்சங்கம் மாவட்ட துணைத் தலைவர் கல்வத், மாவட்ட செயலாளர் I.பஷீர் லால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாளை சிந்தா, SDPI - கட்சியின் கிளை நிர்வாகிகள் அல்தாப், அப்துல் ரஹ்மான், காசிம் ஆகியோர் உடனிருந்தனர்.
கழிவு நீர் ஓடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருக்களில் ஓடிய நிலையில் மாநகராட்சியிடம் புகார் மனு