கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள வேட்டக்குடி கிராமத்தில் நேற்று மாலை முதல் புதிய குடிநீர் இணைப்பு வழங்கிய குழாய்களில் வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த குடிநீரை பருகிய 15க்கும் மேற்பட்ட தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த பகுதியில் இன்று கடலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தினார் அதன்பேரில் விருதாச்சலம் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் அங்கு நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் முகாம் அமைக்கப்பட்டு உடனடியாக அந்த பகுதி மக்களுக்கு அரசு ORSகரைசல் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது. பின்னர் கிராமத்தி உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீரை பரிசோதனை செய்ததில் அந்த குடிநீரை பருக வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் கீதா, வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, மருத்துவர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம், சுகாதார ஆய்வாளர் நாட்டுத்துரை, கிராம நிர்வாக அலுவலர் சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்
விருத்தாசலம் அடுத்து வேட்டக்குடி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் திடீர் ஆய்வு