நெல்லையில் விபத்திலா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி"








 

நெல்லைமாவட்ட தீயணைப்பு துறை மற்றும் திருநெல்வேலி ரோட்டரி சங்கம் சார்பில் நெல்லை மதிதா பள்ளி மாணவ மாணவியர்க்கு விபத்திலா தீபாவளியை கொண்டாட பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என்பது செய்து காண்பிக்கபட்டது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் செந்தில் தலைமை விதித்தார். முன்னாள் தலைவர் பரமசிவன் , செயலாளர் விவேக் ,இயக்குனர்கள்  அன்டனி பாபு, சங்கரநாயகம் , SS சங்கர் முன்னிலை வகித்தனர் . சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாளை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வீரராஜ் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்றும் தீ விபத்து சமயங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் விளக்கி கூறினார் . மேலும் தண்ணீரில் விழந்தவரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும் , பாம்பு வந்தால் மற்றும் கடித்தால் எவ்வாறு செயல்பட வேண்டும்  என்று மாணவ மாணவிகளுக்கு விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அன்டோ செல்வகுமார் , தேவதாஸ் , பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் , ஆசிரியர்கள் சொக்கலிங்கம் , ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்

இதை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.