அக் 24, வேலூர், | நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவில் சேர வேண்டும் என்று தாம் விரும்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சி விருதம்பட்டில் நடைபெற்றது - இதில் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பாத யாத்திரையை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றவர், மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற சிந்தனை.