மீண்டும் அணிசேரா நாடுகள் மாநாடு மோடி புறக்கணிப்பு


அக் 24,புதுடில்லி


பிரதமர் மோடி இந்த ஆண்டும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளார்கொள்கை மாறுபாடு காரணமாக மோடி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு, 18வது அணி சேரா நாடுகளின் மாநாடு வரும் அக்.,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அசர்பைஜானில் நடக்கிறதுஇந்த மாநாட்டில் இம்முறை இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு கலந்து கொள்வார் இந்திய அரசு அறி வித்துள்ளது. 2 வது முறையாக தற்போதும் இம்மாநாட்டில் க ல ந் து கொள்ளாமல் மோடி தவிர்த்துள்ளார். அணி சேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் 2வது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1979 ல் இந்திய பிரதமராக இருந்த சரண் சிங், இந்த மாநாட்டை தவிர்த்தார். இதற்கு 2016ல் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலிலும் கலந்து கொள்ளாமல் மோடி தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை அணிசேரா நாடுகள் மாநாட்டில் இந்தியா சார்பில் அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதே மோடி இந்த மாநாட்டை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அணி சேரா நாடுகள் இந்தியாவின் பயங்கரவாதம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாற்றி அமைப்பு போன்ற முக்கிய பிரச்னைகளில் மிக குறைந்த அளவே ஆதரவு அளித்துள்ளதாக மோடி நினைப்பதும், அவர் இந்த மாநாட்டை தவிர்ப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.