வேப்பூர் அக்-24
வேப்பூர் அருகே காயம்பட்ட புள்ளிமானை மீட்ட போலிசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர், நகர், சேப்பாக்கம் பகுதிகளில் மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து வருகிறது
இந்நிலையில் நேற்றிரவு எட்டு மணிக்கு காயம்பட்ட புள்ளி மான் கண்டபங்குறிச்சி நல்லூர் செல்லும் சாலையில் கிடப்பதாக வேப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது
அதை தொடர்ந்து வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்யராஜ், தலைமை காவலர் செந்தில் ஆகியோர் மானை மீட்டு விருத்தாசலம் வனசரகர் ரவியை வரவழைத்து ஒப்படைத்தனர்
பின்னர் வனசரகர் வேப்பூர் கால்நடை மருத்துவமனையில் மானுக்கு சிகிச்சை அளித்து அருகிலுள்ள காட்டில் விட்டனர்