சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பல கோடி ரூபாயை வங்கிகளுக்கு செலுத்த வேண்டும். அரசு நிா்ணயம் செய்த தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத் தலைவா் பழனிச்சாமி, மாவட்ட நிா்வாகிகள் தண்டியப்பன், ஜெயராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் அய்யம்பாண்டி உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.