விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில்பிரபாகரனின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரபாகரனின் 65-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கதிர்காமம் தலைமை தாங்கினார். பின்னர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை வைக்க மாற்று இடம் வேண்டும் என கோரிக்கை மனுவை நகராட்சி அலுவலரிடம் கொடுத்தனர்.
இதில் பீட்டர், மணிகண்டன், பிரபு, சிவகுமார், பிரபாகரன், திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்