உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் 52வது தேசிய நூலகவாரவிழா





உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 ல் நடந்த

52வது தேசிய நூலக விழா வரும் 20.தேதிவரை கொண்டாப்படுகிறது. முதல்நாள் நிகழ்ச்சி களை  ஓவிய ஆசிரியர் நடராஜன் துவக்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் வி.கே. சிவக்குமார் தலைமை வகித்தார் நூலகர் வீ கணேசன் வரவேற்றார்.நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்.பி அய்யப்பன் வாழ்த்துரை வழங்கி போட்டித்தேர்வுக்கான புதிய நூல்கள் கண்காட்சியை துவக்கி வைத்தார். மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி காப்பாளர் ‌புருசோத்தமன்‌ பேராசிரியர் கண்டிமுத்து வாசகர்கவட்ட உறுப்பினர் ஆனந்தன் நூலகர்கள் செல்வராணி அருள் மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்த நிலவேம்பு குடிநீர் பொதுமக்கள் மற்றும் வாசகர்களுக்குவழங்கப்பட்டது  தொடர்ந்து உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி யில் குழந்தை கள் தினவிழா கொண்டாடப்பட்டது மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு எழுது பொருட்கள் பரிசு வழங்கப் பட்டது.வாசிப்பின்அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.குழந்நைகள்தினவிழாவை முன்னிட்டுசிறப்பு நிகழ்வாக மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு பகத் சிங் சிலம்பம் களரி மார்ஷியல்ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆசான் வீரமணி சிறப்பு சிலம்பம் பயிற்சிகள் அளித்தார் நிறைவாக நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார். நூலகவார  விற்காக பள்ளிகல்லூரி மாணவ மாணவியர் களுக்கு கட்டுரை போட்டிக்கு வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பிலும் மற்றும் கவிதை போட்டிக்கு என்னை மாற்றிய நூலகம் என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டிக்கு நெகிழி ஒழிப்பு இயற்கை யைக் காப்போம் என்ற தலைப்பிலும்போட்டிகள் வரும் 17.11.19ஞாயிறு நூலகத்தில் நடத்தப்பட்டு நிறைவு நாளன்று 20.11.19 பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் நூலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நூலகர் கள் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர் கள் செய்துவருகின்றனர்.


 




 

Attachments area