உடுமலையில்உள்ளாட்சி தேர்தல் வருவதை முன்னிட்டுவிடுதலை சிறுத்தைகள்கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தனியார் மண்டபத்தில் எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜல்லி்பட்டி முருகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக கூட்டணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய கடினமாக உழைப்பது,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை அவதூறாக விமர்சனம் செய்துவரும் கும்பலை தனிப்படை அமைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் செய்ய வேண்டும்,அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ,உடுமலையில் புரட்சியாளர் சட்டமேதை அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என மத்திய மாநில அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் அப்பன்குமார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (எல்எல்எப்) மாநில துணை தலைவர் சத்தியமூர்த்தி மாவட்ட செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார் உடுமலை சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துசாமி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஈஸ்வரன் நகர செயலாளர் உடுமலை ரவிக்குமார் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சிட்டிபாபு குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி உடுமலை ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி உடுமலை பொருளாளர் நாகூர் கனி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.