கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கோட்டத்தில் தமிழ்நாடு நீர் வள நிலவளத் திட்டம் கீழ் வெள்ளார் உபவடி நிலப்பகுதி - பரளுர் கிராமத்தில் மலடு நீக்க சிகிச்சை முகாம நேற்று நடைபெற்றது.கடலூர் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் கே .குபேந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்முகாமில் விருத்தாச்சலம் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையும், 40 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பணி நடைபெற்றது. மலடு நீக்க முகாம் ஏற்பாடுகளை மருத்துவர் நந்தகுமார் செய்தார். இந்த முகாமில்கால் நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புஉதவியளர்கள் முகாம் பணிகளைமேற்கொண்டனர்.