காவலரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவு.

வாகன ஓட்டிகளிடம் காவலர்  லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து காவலரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவு.

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளக்கோவில் கரூர் சாலையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் இருளாண்டி வாகன சோதனையில் ஈடுபட்டதுடன்  அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களிடம் லஞ்சமாக பணம் பெற்றுள்ளார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்த வீடியோ வைரலாக பரவி அதை தொடர்ந்து காவலர் இருளாண்டியை  பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் உத்தரவிட்டுள்ளார்