கடலூர் பெரு நகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கடலூர் பெருநகராட்சி பகுதிகளான வில்வ நகர், அழகப்ப நகர், பகவதி அம்மன் கோவில் தெரு, ராஜாம்பாள் நகர், போன்ற பகுதிகளில் இருந்து மழைநீர் அடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேறாமல் அப்பகுதி நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
கடலூர் நகராட்சி பகுதிகளில் மழையின் காரணமாக சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத இடங்களில் அடைப்பை இயந்திரங்களின் மூலம் சரிசெய்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் கடலூர் நகராட்சி ஆணையாளர் இராமமூர்த்தி தலைமையில் நகர்நல அலுவலர் மருத்துவர் அரவிந்த் ஜோதி முன்னிலையில் கடலூர் பெரு நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நீரை வெளியேற்றி துரித நடவடிக்கை எடுத்தார்கள்.
சாக்கடையில் தண்ணீர் செல்ல முடியாத அடைபட்டிருந்த நீரை இயந்திரங்களின் மூலம் நடவடிக்கை எடுத்து சாக்கடை நீரை செல்ல வழிவகை செய்தார்கள்.நேற்று கடலூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல் சந்திப்பில் உள்ள சாக்கடை அடைப்பை இயந்திரங்களின் மூலமாக நகராட்சி பணியாளர்களை கொண்டு தண்ணீர் செல்ல வழிவகை செய்தார்கள். தற்போது வில்வ நகர், அழகப்ப நகர் ,மாரியம்மன் கோயில் தெரு, ராஜாம்பாள்நகர் போன்ற பகுதிகளில் இருந்து இந்த அடைப்பு நீக்கத்தின் காரணமாக தேங்கியிருந்த மழை நீர் வெகுவேகமாக வடிய தொடங்கியுள்ளது. கடலூர் பெருநகராட்சி துரித நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.