கல்லிடைகுறிச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுக்கடை திறக்க எஸ்.டி.பி.ஐ எதிர்ப்பு. ஆட்சியர் அலுவலகத்தில் மனு.


கல்லிடைகுறிச்சி ரயில் நிலையம் அருகே மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் டாஸ்மார்க் மதுபான கடை திறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி அம்பை சட்டமன்ற தொகுதி தலைவர் சுலைமான் தலைமையில் ஆட்சியார் அலுவகத்தில் மனு அளித்தனர்.அதில் கூறபட்டுளதாவது மேற்கண்ட டாஸ்மார்க் மதுபான கடை திறப்பு வேலைகள் நடைபெற்று வரும் பகுதி மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியாகும். அதன் அருகே இரயில் நிலையம் பேருந்து நிலையம். தனியார் மேல்நிலை பள்ளி, பத்திரபதிவு அலுவலகம், மருந்தகம் என பெண்கள் குழந்தைகள், மாணவ மாணவிகள் அதிகம் நடமாடும் பகுதியாகும் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்  எனவே சம்பந்த பட்ட இடத்தில மதுபான கடை அமைக்க அனுமதி மறுக்க கோரியுள்ளனர். இந்நிகழ்வில்  எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், தொகுதி செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.ராஜா, எஸ்.டி.டி.யூ மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாளை சிந்தா பெண்கள்  பாதுகாப்பு பேரவை மாநில பொருளாளர்
அமீன். எஸ்டிபிஐ  மகளிர் அணி அம்பை சட்டமன்ற தொகுதி தலைவர் பீர்பாத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.