தாராபுரம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆறாயிரம் ஏக்கர் நிலங்களை எஸ்.சி. தாழ்த்தப்பட்டஅருந்ததியர் மக்களுக்கு வழங்க கோரி தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய திராவிட மக்கள் முன்னேற்றகட்சியின் சார்பில் மனு..... திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய திராவிடமக்கள்முன்னேற்ற கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் வீராச்சிதம்பரம் தலைமையில் மனுயளித்தனர். அந்த மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீராச்சிதம்பரம் தாராபுரம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டஆறாயிரம் ஏக்கர் நிலத்தை எஸ்.சி. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அதற்க்கான அறிவிப்பைதமிழக அரசு பத்திரிக்கையில் வெளியிட வேண்டும் என தெரிவித்தார். இதில் கிறிஸ்டோபர் மாநில சிறுபான்மைபிரிவு ஓருங்கிணைப்பாளர், யாக்கோப் மாநில அமைப்பு செயலாளர், சு.சிரஞ்சீவி திருப்பூர் மாவட்ட செயலாளர், கே.பழனிச்சாமி குண்டடம்ஒன்றியசெயலாளர், ராஜரத்தினம் தாராபுரம் வட்டார தலைவர், சுப்பிரமணிமாவட்ட பொருளாளர் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Attachments area