கடந்த ஆண்டை போலவே அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தின் முப்பத்தி நான்காவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நேற்று துவக்கப்பட்டது. இதற்கான விழா கள்ளக்குறிச்சி ஏ கே டி பள்ளி அருகில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்றார்.அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட அறிக்கை வாசித்தார். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர்கள் உதயகுமார், சண்முகம் ஆகியோர் முன்னிலை உரை ஆற்றினார்கள். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து,466 திட்ட பணிகளுக்கு 194 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டினார். பணிகள் முடிக்கப்பட்ட 52 பணிகளை 24 கோடியே 27 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் திறந்து வைத்தார். 5 ஆயிரத்து 873 பயனாளர்களுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் 23 கோடியே 58 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விழாப் பேருரையாற்றினார்.நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கல்வி, பொருளாதாரம் சிறப்படையும். பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாவட்டம் பிரிக்கப்பட்டது. 5 புதிய மாவட்டங்களை அம்மா அரசு அறிவித்தது. ஒரே ஆண்டில் ஐந்து மாவட்டம் அறிவித்து வரலாறு படைத்துள்ளது அம்மாவின் அரசு. தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உங்களின் முகராசி அம்மாவின் அருளாசியுடன் புதிய மாவட்ட மக்களான உங்களை வாழ்த்துகிறேன். மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற போகிறீர்கள்.கல்வராயன் மலை மக்களுக்கு திட்டங்கள் விரைந்துமுடிக்கப்படும். வேலைவாய்ப்பு விளையாட்டு போன்றவற்றில் ஊக்குவிக்கப்படும். கல்வராயன்மலை புதிய வட்டம் அறிவிக்கப்பட்டது விரைவில் கட்டிடம் கட்டித் தரப்படும்.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனையில் நவீன கட்டிட வசதிகள் ஏற்படுத்தப்படும்.கள்ளக்குறிச்
|
|
<no title>கடந்த ஆண்டை போலவே அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சியில் அறிவிப்பு.