கலப்பு திருமணம் செய்தவர்களு அரசு வேலை வீட்டு மனைகள் வழங்க கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை.


தமிழ்நாடு சாதி மறுப்பு திருமண பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை மனுவை மாநில தலைவர் எம் எஸ்.தமிழ்மாறன் அளித்துள்ளார்.கடந்த 20 ஆண்டுகாலமாக கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு மத்திய மாநில அரசு சலுகைகள் வழங்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு தொகுக்கு குறைந்தபட்சம் 5000 குடும்பங்கள் .வாழ்ந்து வருகிறார்கள். சிலர் எந்த அரசு சலுகைகள் வாங்க முடியவில்லை. முன்னாள் முதல் அமைச்சர் டாக்டர்கலைஞர் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கி அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்கினார். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கவில்லை. தமிழ்நாடு முதல் அமைச்சர் இடம் தொடர்ந்து எங்களது கோரிக்கையான _ கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அனைத்துறைகளிலும் பிரியார்ட்டி கொடுத்து அரசு வேலை வாங்க வேண்டும் என்றூம். 1972ம் ஆண்டு ஆனை படி கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு 3 சென்ட்வீட்டு மனைகள். மற்றும் மாநகராட்சியில் வாழ்ந்து வரும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்க வேண்டும் என்றும். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் மற்றும் துனை முதல் அமைச்சருக்கு பல முறை கோரிக்கை மனு செய்துள்ளோம். மக்கள் ஆட்சி செய்து வரும் சமத்துவ ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதல் அமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும் மாறு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் லச்சக்கனக்கான கலப்பு திருமணம் செய்தவர்களின் குடும்பங்களை காபாற்றுவாரா என கலப்பு திருமணம் செய்தவர்களின் எதிர்பார்ப்பு.