ஐபிஎல் போட்டிக்கு ஏலத்தில் விடப்படவுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியீடு - ராபின் உத்தப்பாவின் அடிப்படை விலை ரூ.1.5 கோடி

2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு ஏலத்தில் விடப்படவுள்ள 332 வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


கொல்கத்தாவில் 19ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் 8 ஐபிஎல் அணி உரிமையாளர்கள், தங்களது அணிக்கு தேவைப்படும் வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளனர்.


இதற்கு பதிவு செய்யப்பட்ட 997 வீரர்களில் 332 பேரின் பெயர்கள், அடிப்படை விலை ஆகியவற்றை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.


அதில் அதிகப்பட்சமாக  உத்தப்பாவின் அடிப்படை விலை ஒன்றரை கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பியூஸ் சாவ்லா, யூசுப் பதான், உனத்கத் ஆகியோரின் அடிப்படை விலை 1 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.