ரூ.100 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள்கள் பறிமுதல்

டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலானபோதைப் பொருள்கள் பிடிபட்டதோடு, சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.


போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டெல்லி உள்ளிட்ட இடங்களில்  சோதனை நடத்தி, 20 கிலோ கோகைன் போதைப் பொருளை கைப்பற்றினர்.


அப்போது 5 இந்தியர்கள், ஒரு அமெரிக்கர், 2  நைஜீரியர்கள்,  இந்தோனேசிய நாட்டை சேர்ந்த ஒருவர் என 9 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஆஸ்திரேலியாவில் 55 கிலோ கோகைன், 200 கிலோ மெதம்பெடமின் ((methamphetamine)) பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு  1300 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.