திருவாரூர் மாவட்டத்தில் பெண் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அவரது 2 மகள்களை பின்னலாடை வேலைக்கு அழைத்து சென்ற பெண் புரோக்கர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வெள்ளகுளத்தை சேர்ந்த கணவரை இழந்தவரான தனலட்சுமிக்கு 10 மற்றும் 11 வயதில் இரு மகள்கள் உள்ளனர். வறுமையில் இருந்த தனலட்சுமியை அணுகி, கோவையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் அவரின் மகள்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, நீடாமங்கலத்தைச் சேர்ந்த தரகர்கள் கனகம், சகுந்தலா ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து அழைத்துச்சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் தனிப்படை போலீசார் கோவை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் பெண் தரகர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.