ஐதராபாத்தில் நாளை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சியின் இடையே செய்தியாளர்களை சந்தித்த இந்திய வீரர் சிவம் துபே, உலகில் தலைசிறந்த அணியாக இந்தியா திகழ்வதாகவும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.