மக்கள் அமைதியாக வாழ, காவடி எடுத்து முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்திய காவல்துறையினர்


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மக்கள் அமைதியாக வாழ வேண்டி காவல்துறையினர் விரதமிருந்து முருகனுக்கு காவடி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.


திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்தது முதல் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழ காவல்துறையினரும், நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க பொதுப்பணித்துறையினரும் கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்று அங்குள்ள குமாரர் கோயிலிலுள்ள முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.


அதன்படி கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீஸாரும், அதிகாரிகளும் காவடி எடுத்து சென்றனர். தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காவடி ஏந்தி சென்றனர்.