ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கியை பறித்து சுட முயன்றபோது, நால்வரையும் என்கவுன்டர் செய்ததாக தெலங்கானா காவல்துறை கூறியிருக்கிறது.
பெண் மருத்துவர்:
கடந்த மாதம் 27ஆம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது.
கைது:
இதையடுத்து முகமது பாஷா, சிவா, சென்ன கேசவலு, நவீன் ஆகிய நான்கு பேரையும், சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் தெலங்கானா போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு மகளிர் அமைப்பினரும், மாணவர்களும், அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
என்கவுன்ட்டர்:
இந்த சூழலில், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வேளையில், குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் சம்சாபாத் அருகே உள்ள சுரங்கப் மேம்பாலத்தில் வைத்து விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர், தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது காவலர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, 4 பேரும் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தெலங்கானா போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய சைபராபாத்(Cyberabad) காவல் ஆணையர் சஜ்ஜனார், அதிகாலை 3 மணியிலிருந்து, காலை 6 மணிக்குள், இடைப்பட்ட நேரத்தில், சாத்நகர்(Shadnagar) பகுதியில் உள்ள சாட்டன்பள்ளி(Chatanpally) சுரங்க மேம்பாலம் அருகே என்கவுன்ட்டர் நடைபெற்றதாக அறிவித்தார்.
என்கவுன்டர் குறித்து பேசிய சம்சாபாத் துணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி, விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவலர்கள் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து சுட முயன்றதாகவும், இதையடுத்தே, தங்களின் தற்காப்புக்காக, நால்வரையும் காவலர்கள் என்கவுன்ட்டர் செய்ததாகவும், கூறியிருக்கிறார்.
குற்றத்தை அவர்கள் எப்படி நிகழ்த்தினர் என்று நடித்துக் காண்பிக்கவே அதிகாலையில் நால்வரையும் அங்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்ட நிகழ்விடத்தில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல் துறையினருக்கு பாராட்டு:
இதனிடையே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் குவிந்துள்ள பொதுமக்கள், அங்கு நின்றிருக்கும் காவல்துறையினர் மீது ரோஜா மலர்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர். தக்க தண்டனை அளித்ததற்காக காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து முழக்கங்களையும் எழுப்பினர். மேலும் அங்கிருந்த காவல்துறையினரை தோளில் தூக்கி வைத்தும் கொண்டாடினர்.
4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை, பெண் மருத்துவரின் வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அங்கு பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசாருக்கும் பெண்கள் இனிப்புகளை வழங்கி நன்றியை வெளிப்படுத்தினர்.
கல்லூரி மாணவிகள் வரவேற்பு:
இதற்கிடையே, பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற, நால்வரையும், தெலங்கானா போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றிருப்பதை, கல்லூரி மாணவிகள் வரவேற்றுள்ளனர். இன்று காலை கல்லூரிக்குச் சென்ற மாணவிகள், போலீசாரைப் பார்த்து உற்சாக முழக்கங்களை எழுப்பி, பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்...
பெண் மருத்துவரின் தந்தை:
இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட கால்நடை பெண் மருத்துவரின் தந்தை, கைதான 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமது மகள் இறந்த 10 நாட்களில், குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். தெலங்கானா அரசுக்கும், காவல்துறைக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், கூறியிருக்கிறார். தமது மகளின் ஆன்மா, தற்போது சாந்தியடையும் என்றும், கால்நடை பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்திருக்கிறார்.
கொண்டாட்டம்:

4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை, பெண் மருத்துவரின் வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அங்கு பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசாருக்கும் பெண்கள் இனிப்புகளை வழங்கி நன்றியை வெளிப்படுத்தினர்.
உத்தரபிரதேச மாநிலம்:
ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேச மாநிலம் மோரதாபாத் அருகே கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவிகள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலும் வாத்தியங்களை இசைத்தும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே போல் 4 பேர் என்கவுண்டரை வரவேற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கல்லூரி மாணவிகள் வாத்தியங்களை இசைத்து உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் பட்டாசுகளை வெடித்தும் மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சித்தூரில் காந்திசிலை முன்பு திரண்ட பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.