திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 6 மணி நேரம் தரிசனத்திற்கான அனுமதிப்பது நிறுத்தி வைப்பு


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 6 மணி நேரம் தரிசனத்திற்கான அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்படவுள்ளது.


ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய தினங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க் கிழமையில் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடைபெறுவது வழக்கம்.


அந்த வகையில ஜனவரி 6 தேதி கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை சுப்ரபாத சேவை முடிந்ததும், காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்படும். தூய்மைப்பணி முடிந்ததும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.