6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...


தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்ககடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னையில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 2 செ.மீ., காரைக்காலில் 1 செ.மீ மழை பதிவாகிவுள்ளது.