நெல்லை எஸ்டிபிஐ கட்சி சார்பாக மேதகு குடியரசு தலைவர்க்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி
எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாவட்டம்
சார்பாக மேதகு குடியரசு தலைவர்க்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட தொகுதி நகர கிளை நிர்வாகிகள் தலைமையில் மேலப்பாளையம், பேட்டை, டவுன், ஜங்ஷன், ஏர்வாடி, அம்பை, மானூர்,மூலைக்கரைப்பட்டி, களக்காடு போன்ற பகுதிகளில் நடைபெற்றது பொதுமக்கள் ஆர்வத்துடன் கடிதம் எழுதினர்
கடிதத்தில் கீழ் கண்ட வாசகம் அமைந்துள்ளது
*பார்வை:* உச்சநீதிமன்ற வழக்கு C.A. No. 10866-67 / 2010 – தீர்ப்பளிக்கப்பட்ட நாள் 9.11.2019
*பொருள்:* தீர்ப்பை மறு ஆய்வு செய்ய ஆவண செய்ய வேண்டி
மதிப்பிற்குரிய ஐயா,
கடந்த 70 ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாபரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான வழக்கில் கடந்த 2019 நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டம், சாட்சியங்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. மாறாக, நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் என்ற பொறுப்பை வகிக்கும் உச்சநீதிமன்றம் செய்யக்கூடாத, சட்டத்திற்கு முரணான செயலாகும். மேலும் இச்செயல் எதிர்காலத்தில் பல்வேறு விவகாரங்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பொறுப்பிலிருக்கும் உயர் அதிகாரம் படைத்த நபர் என்ற அடிப்படையில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்படுத்தி சரியான நீதி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் பாபரி பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க ஆவண செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.