இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியை கண்டு அஞ்ச வேண்டாம் என்று தங்களது பந்து வீச்சாளர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி பயிற்சியாளர் சிமோன்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதையொட்டி பேட்டி அளித்த மேற்கிந்திய தீவுகள் அணி தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ்,'இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட் முக்கியமானது என்றார். ஆனால் அவரை கண்டு எங்களது பந்து வீச்சாளர்கள் அதிகமாக பயப்படக்கூடாது என்ற அவர், தைரியமாக பந்து வீச வேண்டும் என்றார்.