ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சிபிஐ, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மாதம் 9-ந் தேதி மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. தனது முடிவுக்கு பேராசியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என மாணவியின் செல்போனில் பதிவுகள் இருந்ததாக வெளியான தகவலால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை தமிழக அரசு கடந்த வாரம் சிபிஐக்கு மாற்றியது.இயற்கைக்கு மாறான மரணம் என்ற சட்டப்பிரிவில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிற்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.