திராவிட புரட்சிமக்கள் கட்சி அரசியல் ஆலோசகர் நேசமணி பேட்டி





 

மேட்டுபாளையத்தில் சுற்றுசுவர் இடிந்து உயிரிழந்த 17 பேர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ருபாய் நிவார்ணமாகவும் குடும்பத்தில் ஓருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும் என திராவிட புரட்சிமக்கள் கட்சி அரசியல் ஆலோசகர் நேசமணி பேட்டி..... திருப்பூர்மாவட்டம் தாராபுரத்தில் திராவிட புரட்சிமக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகர் நேசமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மேட்டுப்பாளையத்தில் சுற்றுசுவர் இடிந்து உயிரிழந்த 17 குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். உயிரிழந்த அக்குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலைவழங்கவேண்டும்,17 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற தமிழ் புலிகட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை எந்த நிபந்தனையும்யின்றி விடுதலை செய்யவேண்டும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றகழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார். பேட்டியின்போது அக்கட்சியின் மாநிலதுணை பொது செயலாளர் பொல்லான், தாராபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.