ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மாணவர்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
அதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 100 மாணவ, மாணவியர் அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி உதவி பெறுகின்றனர்.