தொடர் மழையால் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறிவருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு பிள்ளையார் குப்பம் தடுப்பணை வந்தடைந்து நிரம்பியுள்ளது.
இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தான வகையில் குளிப்பதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.