தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.




தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி, கடந்த மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்தது.


இதனிடையே நீதிபதி சிவஞானம் கடந்த 3 மாதங்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வந்ததால், ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


அதன்படி வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு, ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.