4-12-2019,புதன்கிழமை,கோவைமாநகராட்சி, வார்டு 66, நவ இந்தியா - இந்துஸ்தான் கல்லூரி சாலை, பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகள் நடந்ததால், படு கேவலமான நிலையில் சாலை உள்ளதால், பொதுமக்கள் நடந்தோ,வாகனங்களில் செல்லவோ முடியாதவாறு பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும்,நகர்நலச் சங்க நிர்வாகிகளும் கோவை மாநகர்மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதியில் மின்கம்பங்கள் சாலையின் நடுவில் உள்ளது. அந்த மின்கம்பங்களை சாலையின் ஓரத்தில் மாற்றியமைக்குமாறும், மின் கம்பங்களை மாற்றியமைத்த பிறகு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து, திரு.நா.கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் நேரில் சென்று அப்பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டு,உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது , வட்டக்கழகச் செயலாளர் இரா.சேரலாதன்,நகர்நலச் சங்க நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
|
பழுதடைந்துள்ள நவ இந்தியா - இந்துஸ்தான் கல்லூரி சாலை -புதிய சாலை அமைக்க கோரிக்கை - நா.கார்த்திக் எம் எல் ஏ ஆய்வு I