சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 4 ரயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்திவிட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பொருட்களை மறு சுழற்சிக்காக தூளாக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு இயந்திரம் 2 லட்சத்து 21 ரூபாய் என தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டு முதற்கட்டமாக சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
கீழே தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இந்த இயந்திரத்தில் போட்டால் அடுத்த சில நிமிடங்கள் அவை தூளாக்கப்பட்டு விடுகிறது. அதன்பிறகு அவை ஒப்பந்த ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி இயந்திரத்தில் போட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க பயணிகள் உதவுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.