உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை


உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தியது.


சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.


பாஜக சார்பில் பொன் ராதா கிருஷ்ணன்,கே.டி. ராகவன், பாமக சார்பில் ஜிகே மணி, ஏகே மூர்த்தி, தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மோகன் ராஜ் ஆகியோரும், தமாகா சார்பில் ஞானதேசிகன் மற்றும் கோவை தங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதா கிருஷ்ணன், ஜிகே மணி ஆகியோர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தனர்.