நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குனர் மித்ரன், தயாரிப்பாளர் ராஜேஷ், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட பிளே ஹீரோ என்ற கேமை விளையாடி வென்ற ரசிகர், விழாவில் டிரைலரை வெளியீட்டார்.