விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் எஸ் ஒ எஸ் ஆப் குறித்த விழிப்புணர்வு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் காவலன் எஸ் ஓ எஸ் ஆப் குறித்தவிழிப்புணர்வு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின் உத்தரவின்பேரில்
விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவிகள் இதில் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபா லட்சுமி விருத்தாசலம் அனைத்து காவல் உதவியாளர் காமிலபானு மற்றும் மகளிர் ஆசிரியர்களுக்கு அழைத்து காவலன் எஸ் ஓ எஸ் ஆப் குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.
பின்பு எஸ் ஓ எஸ் ஆப் பயன்கள் குறித்து கிருபா லட்சுமி பேசியது பொதுமக்கள் அவரவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள காவல் நிலைய எண் தெரியும் பக்கத்து ஊருக்குப் போகும்போது ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் எந்த காவல் நிலையம் அந்த காவல் நிலைய எண் என்னவென்று தெரியாது காவலன் எஸ் ஒ எஸ் ஆப்பை டச் செய்தால் போதும் போலீசின் உதவி கிடைக்கும் இந்த ஆப்பை சேவ் அவர் சொல் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப்பை டச் பண்ணினால் மட்டும் போதும் சென்னையில் உள்ள தலைமை காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுவிடும் அவர்கள் பேக் பண்ணி எந்தக் காவல் நிலையமோ அந்த காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள் அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்று கண்காணித்துக் கொண்டே இருப்பவர்கள் இதன் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லோரும் ஆண்ட்ராய்டு மொபைலில் ப்ளே ஸ்டோரில் KAVALAN SOS என்று டைப் பண்ணினால் பச்சைக் கலரில் வரும் அதன்பின் போலீஸ் தொப்பி உள்ள லோகோ காணப்படும்.
பின்பு அதில் முகவரி மற்றும் உங்களுக்கு உதவி செய்யும் முக்கியமான மூன்று நபர்களின் போன் நம்பர் பதிவு செய்து ரிஜிஸ்டர் பண்ண வேண்டும்
அப்படி செய்யும்போது யாரேனும் ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாள் அவர்கள் எஸ் ஓ எஸ் ஆப் டச் செய்யும்போது அந்த மூன்று நம்பருக்கும் மெசேஜ் போகும்.
இதன்மூலம் அவர் ஆபத்தான இடத்தில் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும் மேலும் போலீஸுடன் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. என தெரிவித்தார்.
இதில் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் உடன் மற்றும் அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரி முதல்வர் ராஜவேல் மற்றும் ஏராளமானோர் மாணவிகள் கலந்து கொண்டனர் காவலன் எஸ் ஓ எஸ் ஆப் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தினர்