உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் வெப்சிரியல் தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப்சிரியல் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இணையதள தொடரை வெளியிட தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும், அதை பரிசீலித்து குயின் தொடரை வெளியிட தடைவிதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.