கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடிச் செல்லும் SI


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடியதாக காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


அங்குள்ள காவல் நிலையத்தில் கார்த்திகேயன் என்பவர் உதவி ஆய்வாளராக இருந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி இரவு மணல் கடத்தல் வழக்கில் பிடிப்பட்டு காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் லாரியின் பேட்டரி மற்றும் டீசலை, பிரண்ட்ஸ் ஆப் போலீசான முருகன் என்பவரின் உதவியுடன் திருடிக் காரில் எடுத்து வைத்துக் கொண்டு சென்றார்.


இது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி கண்ணன், உதவி ஆய்வாளர் கார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டார். அதன் பிறகு கார்த்திகேயன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.