சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெண்ணை கொன்று புதைத்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த சீர்தங்கியை சேர்ந்தவர் அமல செல்வி. கணவரை பிரிந்து கட்டிட வேலை செய்து வந்த இவருக்கும், தேவகோட்டை அடுத்த சித்தானூரை சேர்ந்த கொத்தனார் கண்ணனும் நெருக்கமான பழக்கம் இருந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் 8ம் தேதி முதல் அமல செல்வியை காணவில்லை. அவரது செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்த போது, கண்ணன் கடைசியாக பேசி இருந்தது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்து வந்த அவரை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மகளின் எதிர்காலத்தை கருதி கண்ணனுடனான பழக்கத்தை அமல செல்வி குறைத்தார். இதனால் கோபம் அடைந்த கண்ணன், கடந்த மாதம் அமல செல்வியை சித்தானூர் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்தார். பின்னர் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை கண்மாயில் புதைத்துள்ளார். குழிதோண்டி எடுக்கப்பட்ட உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.