சீன பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பை நிறுத்திவைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு, நாளை முதல் புதியதாக கூடுதல் வரி விதிக்க டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதனால், அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போரின் பதற்றம் அதிகரித்தது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில், சீனப் பொருட்களுக்கான கூடுதல் வரியை நிறுத்திவைக்க அமெரிக்க வர்த்தக ஆலோசகர்கள் ஒப்புக் கொண்டனர்.
அதற்கு பதிலாக, அமெரிக்காவிடமிருந்து மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து, சீனப் பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வருவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.