லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரமாண்ட ராட்டினம், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) விரைவில் பார்வையாளர்களுக்கு திறக்கப்படவுள்ளது.
ரியோ ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ராட்டினத்தின் உயரம் 288 அடியாகும். போர்டோ மரவில்கா பகுதியில் வைக்கப்பட்டுள்ள அந்த ராட்டினம் விரைவில் பார்வையாளர்களுக்கு திறக்கப்படவுள்ளது.
இந்த ராட்டினத்தின் மூலம், உலகளவில் பிரேசிலின் அடையாளமாக கருதப்படும் மலை சிகரம் மீதிருக்கும் ஏசு கிறிஸ்து சிலை, சுகர் லோப் மலை ஆகியவற்றை புதிய கோணத்தில் இனி காண முடியும்.