சிறுவந்தாடு ஊராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்.


விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாடு ஊராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். நிகழ்ச்சியில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடு போன்ற பல்வேறு மனுக்கள் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்கள் மீது அந்தந்த துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடனடியாக தீர்வு காணும் வகையில் மனுக்களை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நிவாரணம் வழங்க ஆணை பிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் வானுர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், வருவாய் வட்டாட்சியர் கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ராணி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜசேகர், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் கே.ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் எல்.கே கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சௌரிராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் சி. ஆர். ஏழுமலை, முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் சேகர், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீதாராமன், ஒன்றிய பாசறை செயலாளர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம். எஸ். ஆர். முருகன், தணிகாசலம், குமரேசன், அதிமுக நிர்வாகிகளான கௌரிதுரை, பழனிவேல், வேல்முருகன், சீனிவாசன், வெங்கடாசலபதி, மதியழகன், பாலகிருஷ்ணன், பாரதி, தமிழ்மணி, பத்மநாபன், வருவாய் ஆய்வாளர் திருமாவளவன் நன்றி கூறினார்.