உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நெல்லை ம.தி.தா. மேல்நிலைப் பள்ளியில் திருநெல்வேலி ரோட்டரி கழகத்தின் சார்பில் மாணவ மாணவியரிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேச்சு போட்டி , ஒவிய போட்டி , எழுத்து போட்டி ஆகியன நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார் . செயலாளர் விவேக் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருநெல்வேலி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பரமசிவன் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாணவ மாணவியரிடையே ஏற்படுத்தி , மக்களிடம் சென்றடைய கேட்டு கொண்டார் . இதை தொடர்ந்து எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேச்சு போட்டி , ஒவிய போட்டி , கட்டுரை போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்க்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உதவி ஆளுனர் தனிஷ்க் ஹரிகிருஷ்ணன் , இயக்குனர் எஸ்.எஸ்.சங்கர், ஆசிரியர் கந்த முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். |
எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேச்சு போட்டி , ஒவிய போட்டி , கட்டுரை போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது