சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து போட்டியிட அனைத்து கட்சியினரும் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்று வருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் முகாம் சாத்தான்குளத்தில் இன்று நடைபெற்றது. மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீராம் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்வதுடன் விருப்ப மனு அளித்தனர்.
அப்போது வட்டாரத் தலைவர்கள் சாத்தான்குளம் வி.பி. ஜனார்த்தனம், ஆழ்வார்திருநகரி கோதாண்டராமன், சாத்தான்குளம் நகரத் தலைவர் வேணுகோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் மகேந்திரன், அம்பலச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வழக்குரைஞர் வில்லின்பெலிக்ஸ், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் சாமுவேல் ஞானதிரவியம், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வர்க்கீஸ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஊடகபிரிவு தலைவர் மரியராஜ். உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.