தங்கம் விலை உயர்ந்துள்ளது.


தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்துள்ளது.


கடந்த சில மாதங்களாக ஏறுமுகம் கண்டு வந்த தங்கம் விலை, சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 28 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 22 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 622 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனையானது.


சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையானது. பார் வெள்ளி ஒரு கிலோ 47 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.