நெல்லையில் வியாபாரிகள் உண்ணாவிரதம்
பாளை பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் வியாபாரிகளுக்கு கடை ஓதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க கோரி பாளை சித்தா மருத்துவ கல்லூரி முன் பாளை பேரூந்து நிலைய வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர் பாளை பேரூந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். செயலாளர் அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தை முன்னாள் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மாவட்ட அனைத்து உள்ளாட்சி கடைகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர் மாலைராஜா துவக்கி வைத்தார். பாளை பேரூந்து நிலையத்தில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு மாற்று கடை வழங்கும் வரை கால அவகாசம் வழங்கிடவும், அனைத்து வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான மாற்று கடைகள் ஓரே இடத்தில் ஏற்படுத்தி தந்திடவும். புதிய கட்டுமான பணி முடிந்த பின் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் ஓதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றி உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. நெல்லை மாவட்ட அனைத்து உள்ளாட்சி கடைகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஜே.எம்.சாலமோன் உண்ணாவிரதத்தை பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார். பாளை பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க பொருளாளர் சேக் முகம்மது நன்றி கூறினார்