தனது பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைருக்கும் நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், திரைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதற்கு பதிலுரைக்கும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி, தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த நண்பர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.